வீரமங்கை வேலுநாச்சியார் – சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் விழா கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் சிறப்பாக கொண்டாட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 January 2026

வீரமங்கை வேலுநாச்சியார் – சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் விழா கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் சிறப்பாக கொண்டாட்டம்.


உளுந்தூர்பேட்டை, ஜன. 04:


வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 297-வது பிறந்தநாள் விழாவும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே அவர்களின் 196-வது பிறந்தநாள் விழாவும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், ஆமினா பெண்கள் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை செயல்படுத்தி வரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஏ.குமாரமங்கலம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்த வரலாற்று நாயகிகளின் பிறந்தநாள் விழா, பள்ளி நிர்வாகி இதாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் டி. அய்யாதுரை, மீடியா அ. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் எம். வினோதினி, டி. ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை எஸ். நித்தியா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 250 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் வீரம், நாகரிகம் மற்றும் பண்பாட்டை உலகிற்கு எடுத்துச் சொன்ன வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீரச் சாதனைகள் மற்றும் தியாகங்களை மாணவிகள் உரைகள், நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் மூலம் உணர்வூட்டும் வகையில் வெளிப்படுத்தினர்.


அதேபோல், பழமைவாத சமூக சூழலில் பெண் கல்வி, சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சாவித்திரிபாய் பூலே அவர்களின் வரலாற்றுச் சாதனைகள், சமூகப் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் குறித்து மாணவிகள் கலை நிகழ்ச்சிகளின் மூலம் எடுத்துரைத்தனர். மாணவிகளின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றன.


கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் எஸ். சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, வரலாற்று நாயகிகளின் வாழ்க்கையில் இருந்து மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் ஜி. அருள்மொழி, பி. லாவண்யா, பி. பூஜா ராணி, எஸ். உமா, கே. மரிய ஜெனிஃபர், டி. ஜோதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் இறுதியில் பள்ளி கணக்காளர் ஏ. தமிழ்செல்வி நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad